ADDED : மே 03, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை உறுதிப்பாட்டு மையம் தேசிய கல்விக் கொள்கை அமலாக்க குழு சார்பில் புதிய கல்வி கொள்கை 2020 பாடத்திட்ட கட்டமைப்பு குறித்த பேராசிரியர்களுக்கான முகாம் பல்கலையில் நடந்தது.
பொறுப்பு துணை வேந்தர் காமகோடி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார்.மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், கர்நாடகா ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் பல்கலை துணைவேந்தர் விஷ்ணுகாந்த் சட்பலிகடக், பெங்களூரு சமூக கல்வி ஆய்வு மைய இயக்குனர் கவுரிஷா முன்னிலை வகித்தனர்.பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், உறுதிப்பாட்டு மைய இயக்குனர் மகாலிங்கம் பங்கேற்றனர்.