/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தந்தை உயிரிழந்த வழக்கில் மகன் கைது
/
தந்தை உயிரிழந்த வழக்கில் மகன் கைது
ADDED : நவ 04, 2025 01:35 AM
இடைப்பாடி, ந
சங்ககிரி தாலுகா, குள்ளம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மகனை போலீசார் கைது
செய்தனர்.
சங்ககிரி தாலுகா, குள்ளம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர் தங்கவேல், 68. இவர், 8 ஆண்டு
களுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவ
து மகன் விஜயகுமார், 43, அரசிராமணி பேரூராட்சியில், அ.தி.மு.க., தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார். விஜயகுமார், அவரது தந்தையின் ஓய்வூதிய தொகையை கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம், 22ல் தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு, கட்டையாலும் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த தங்கவேல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த, 1ல் உயிரிழந்தார்.இது குறித்து தேவூர் போலீசார், கொலை வழக்காக பதிந்து, நேற்று விஜயகுமாரை கைது செய்தனர்.

