/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வு 130 பேர் ஆப்சென்ட்
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வு 130 பேர் ஆப்சென்ட்
ADDED : பிப் 23, 2025 05:18 AM
திண்டுக்கல் : மத்திய அரசின் தேசிய வருவாய்வழி , திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது
. நடப்பு ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 21 மையங்கள் அமைக்கப்பட்டிருந்து. விண்ணப்பிருந்த 5688 பேரில் 5558 பேர் தேர்வெழுதினர். 130 பேர் எழுதவில்லை. நாடு முழுவதும் 1 லட்சம் மாணவர்களை தேர்வு செய்து, 9 முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். இந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த 6,700 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

