ADDED : ஆக 21, 2024 08:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் நேற்றுமுன்தினம் மதியத்திற்கு மேல் சீரான இடைவெளியில் மழை பெய்த வண்ணமே இருந்தது.
பழநி, நத்தம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரே நாளில் 147மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் திண்டுக்கல் 6, பழநி 51.50, சத்திரப்பட்டி 12.80, நத்தம் 25, கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா 26.30, ரோஸ்கார்டன் 26.90 மி.மீ., எனமழையளவு பதிவாகி உள்ளது.

