/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூண்டியில் 5 நாள் மின்தடை லாரியை சிறைபிடித்த மக்கள்
/
பூண்டியில் 5 நாள் மின்தடை லாரியை சிறைபிடித்த மக்கள்
பூண்டியில் 5 நாள் மின்தடை லாரியை சிறைபிடித்த மக்கள்
பூண்டியில் 5 நாள் மின்தடை லாரியை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஆக 18, 2024 07:08 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் பூண்டியில் தொடர் மின்தடையை கண்டித்து மின்கம்பம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கொடைக்கானல் பூண்டியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் 5 நாளாக மின்தடை ஏற்பட்டது. மின் உதவி பொறியாளர் முறையான பதில் அளிக்காததோட , சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரியும் சீர் செய்யவில்லை. டிரான்பார்மர் கொண்டு வருவதற்கு லாரி வசதி இல்லை. மின்கம்பமும் கைவசம் இல்லை என மின் துறையினர் அலைக்கழிப்பு செய்தனர். இந்நிலையில் கிளாவரைப் பகுதியில் தனியார் காட்டேஜ்க்கு புதிய மின் வழித்தடம் அமைப்பதற்காக மின்கம்பங்கள் தனியார் லாரியில் நேற்று காலை கொண்டுவரப்பட்டது. இதையறிந்த மக்கள் லாரியை மறித்தனர். மின்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்துள்ளனர். உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறுகையில்,'' பூண்டி பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் நிலையில் மின்தடை ஏற்பட்டது. புதிய டிரான்ஸ்பார்மர் திண்டுக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் மின்தடை சீர் செய்யப்படும்'' என்றார்.

