/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதைக்காளான் விற்பனை 'கொடை'யில் 5 பேர் கைது
/
போதைக்காளான் விற்பனை 'கொடை'யில் 5 பேர் கைது
ADDED : ஆக 18, 2024 02:07 AM
கொடைக்கானல்:கொடைக்கானலில் சமீப காலமாக போதைக்காளான் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் மணி 45, பாண்டியராஜன் 30, கும்பூரை சேர்ந்த ரகுபதி 21, ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 137 கிராம் போதைக்காளானை பறிமுதல் செய்தனர். கொடைக்கானல் கோஹினூர் பங்களா அருகில் போதைக்காளான் பறித்த மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணிகளான சூர்யா 25, மகேஷ் 25, ஆகியோரை வனத்துறையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களை கைது செய்த போலீசார் 2 கிராம் போதைக் காளானை பறிமுதல் செய்தனர். மேலும் போதைக் காளான் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 13 பேரை எச்சரித்து அனுப்பினர்.
டி.எஸ்.பி., மதுமதி கூறுகையில் ''நடப்பாண்டில் போதைக் காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது தலா 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதைக்காளான் தீங்கு குறித்து எச்சரிக்க பதாகை அமைக்கப்படும். போதைக்காளான் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

