தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இரு மடங்கு விலை உயர்ந்த கொத்தவரை

இரு மடங்கு விலை உயர்ந்த கொத்தவரை

இரு மடங்கு விலை உயர்ந்த கொத்தவரை


ADDED : ஜூலை 15, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், ஜூலை 16-

வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கொத்தவரை விலை இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, சாலைப்புதுார் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கொத்தவரை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன் கொத்தவரை அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.20க்கு விற்பனையானது.

சுட்டெரிக்கும் வெயிலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. இதனால் கொத்தவரை கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து ரூ.40க்கு விற்பனையானது.

வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘வரும் நாட்களில் கொத்தவரை வரத்து இன்னும் குறையும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us