தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இடமிருந்தும் வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்

இடமிருந்தும் வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்

இடமிருந்தும் வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்


ADDED : ஜூலை 11, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, ஜூலை 12

வடமதுரையில் குறுகலான வீதியில் வாடகை கட்டடத்தில் தபால் அலுவலகம் இயங்குவதால் பல்வேறு சிரமங்களை மக்கள் சந்திக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன் வடமதுரை பேரூராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாப் அருகில் வாடகை இடத்தில் தபால் அலுவலகம் இயங்கியது. தற்போது அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் வாடகை கட்டடத்தில் உள்ளது.

இப்பகுதிக்கு முறையான பாதை வசதி இல்லை. குண்டும், குழியுமான ரோடுடன் தனியார் இடம், சுற்றுப்பாதையாக கூட்டுறவு சங்க வளாக பாதையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தபால் சேவை பெற அவசியமற்ற அலைச்சல், சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

வடமதுரை பழைய போலீஸ் குடியிருப்பு அருகில் தபால் நிலையத்திற்கென இடம் வாங்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் கட்டடம் அமைக்க நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளது. தபால் நிலையத்திற்கென இருக்கும் அரசு இடத்தில் கட்டட வசதி உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us