ADDED : ஏப் 21, 2024 04:39 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிட்டார்.
தேர்தல் அறிவிப்பு நாள் முதல் ஓட்டுப்பதிவு வரை தேர்தல் களப்பணியாற்றிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அ.தி.மு.க., சார்பில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் நன்றி தெரிவித்தனர். அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
