ADDED : ஆக 21, 2024 08:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் - - மதுரை ரோடு யூசுப்பியா நகரில் முஸ்லிம்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த இதற்கு மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய் கோஷ், மாவட்ட செயலாளர் செல்வராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் சம்சுதீன், துணைத் தலைவர் முகமது ஹனிபா முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டனர்.

