/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுதந்திரமாக ஓட்டளிக்க தேவை நடவடிக்கை
/
சுதந்திரமாக ஓட்டளிக்க தேவை நடவடிக்கை
ADDED : ஏப் 18, 2024 05:38 AM
குஜிலியம்பாறை: மேட்டுப்பட்டியில் ஓட்டளிக்க வரும் போது கட்சியினரின் தொந்தரவால் சுதந்திரமாக ஓட்டளிக்க முடியாது மக்கள் தவிக்கின்றனர். இதன் மீது போலீசாரின் நடவடிக்கை அவசியமாகிறது .
குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சி மேட்டுப்பட்டி அரசு துவக்கப் பள்ளி ஓட்டுச்சாவடி உள்ளது. இங்கு புது மாரப்பன்பட்டி, மேட்டுப்பட்டி, பிரேம்நகர், பாறைப்பட்டி, கணக்குப்பிள்ளையூர் உள்ளிட்ட 9 கிராம மக்கள் ஓட்டளிக்கின்றனர். கூம்பூர் புளியம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் உள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடிக்கு சிறிதுதுாரம்நடந்து செல்ல வேண்டியுள்ளது.
வழியில் அந்த சின்னத்திற்கு போடுங்கள், இந்த சின்னத்திற்கு போடுங்கள் என மூளைச்சலவை செய்து கொண்டே கட்சியினர் கூட்டமாக ஓட்டுச்சாவடி வரை நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
மிகத் தெளிவான நிலையில் மக்கள் இந்தக் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற முடிவோடு செல்லும் நிலையில் இவர்களின் தொந்தரவால் பொதுமக்கள் தவிக்கின்றனர். எந்த தேர்தல் வந்தாலும் இங்கு கூட்டம் கூடுவதும், பொது மக்களை மூளைச்சலவை செய்வதும் தொடர்கிறது.
இதை நடப்பு தேர்தலில் இருந்தே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. மாவட்ட போலீஸ் நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

