/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வினியோகம்
ADDED : ஜூலை 17, 2024 12:27 AM

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து துண்டு பிரசுர வினியோகம் தருமத்துப்பட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். தருமத்துப்பட்டி ஊராட்சித் தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன், கரிசல்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சூடாமணி பங்கேற்றனர்.
ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் என்.பஞ்சம்பட்டியில் துண்டு பிரசுர வினியோகம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி இணைச் செயலாளர் ஆனிசோபிமிடில்டா, வக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார், என்.பஞ்சம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.