/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏ.கே.வி.,பள்ளியில் முப்பெரும் விழா
/
ஏ.கே.வி.,பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : மார் 29, 2024 06:11 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியில் உள்ள ஏ.கே.வி.,.வித்யா பள்ளியின் ஆண்டு, பட்டமளிப்பு, விளையாட்டு என முப்பெரும் விழா எல்.என்.டி.பொது மேலாளர் ஜெயசீலன் தங்கபாண்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் கற்பகம் வரவேற்றார். பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரி சேர்மன் ரகுராமன் முன்னிலை வகித்தார். சக்தி விநாயகர் டிரான்ஸ்போர்ட்உரிமையாளர் சந்திரன்,தொழிலதிபர் பாஸ்கரன், ஆர்.எஸ்.கடலை மில் உரிமையாளர் சண்முகம் பங்கேற்றனர். இந்த
முப்பெரும் விழாவை சங்கமம் நிகழ்ச்சியாக வடிவமைத்து பல்வேறு மாநில கலாசார கலைநிகழ்ச்சிகள் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது. கல்வி சாதனை, விளையாட்டு போட்டிகள், வருகை பதிவேடு அடிப்படையில் சாதனை மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

