/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முனியப்பன் சுவாமிக்கு அன்னதானம்
/
முனியப்பன் சுவாமிக்கு அன்னதானம்
ADDED : ஆக 17, 2024 01:41 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் மரத்தை முனியப்பன் சுவாமியை நினைத்து ஆடுகள் வெட்டி- 3ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வினோத விழா நடந்தது.
கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி செடிபட்டி பிரிவில் பெரிய புளிய மரத்தை முனியப்பன் சுவாமியாக சுற்று கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். இங்கு ஆடி மாத கடைசி நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு முனியப்பன் சுவாமி மரத்திற்கு மாலைகள் மற்றும் சந்தனம் பூசி சிறப்பு அலங்காரம் செய்தனர்.
தொடர்ந்து நேர்த்திக்கடனாக செலுத்திய 20க்கு மேற்பட்ட ஆடுகள், 50-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்களைக் கொண்டு அசைவ உணவு சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அய்யாபட்டி, செடிப்பட்டி, கோபால்பட்டி ,சுற்று பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

