ADDED : ஜூலை 01, 2026 11:42 PM
அ நிறம் | அளவு
பழநி, ஜூலை 2
ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ஜூன் 28ல் உச்சிகால பூஜையில் ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து ஜூன் 29ல் திருஆவினன்குடி கோயில், ஜூன் 30ல் பெரியநாயகி அம்மன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
நேற்று கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து பூஜித்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம், சாயரட்சை பூஜையில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றுடன் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது.
