ADDED : ஏப் 16, 2024 06:36 AM

அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை தொட்டயகவுண்டனுாரில் சித்திமுக்தி விநாயகர், மாரியம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
ஏ.வி.பட்டி காளியம்மன் கோயிலில் இருந்து பல்வேறு புன்னிய தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை உட்பட யாக சாலை பூஜைகள் நடந்தன. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். பொங்கல் வைத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
