
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கலையம்புத்துார் அக்ரஹாரம் ஸ்ரீ கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயிலில் வருடாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு ஹோமம் நடந்தது. அதன் பின் ருத்ர ஜபம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவர் வீதி உலா எடுத்துவரப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.