UPDATED : ஆக 05, 2026 11:31 PM
ADDED : ஆக 05, 2026 10:24 PM
திண்டுக்கல்:ஆத்துார் கூட்டுறவு கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் திண்டுக்கல் ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த 'மை பாரத் திண்டுக்கல்' மாவட்ட அளவிலான போட்டிகளிலும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, திண்டுக்கல் மாவட்ட கிளை நிகழ்ச்சிகளிலும், பான் செக்கர்ஸ் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
கல்லுாரியில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீராகவ்பாலாஜி மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் கார்த்திக்கவுதம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வகுமார், கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி, நிர்வாக அலுவலர் ராஜேஷ்கண்ணா, பேராசிரியர்கள் பிரதீபா, மோகனசெல்வி, கார்த்திகேயன், உதவி பேராசிரியர்கள் இளமாறன், ஜெகதீஸ் உடனிருந்தனர்.
