ADDED : மே 10, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 11-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 99.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர் அங்கமுத்து 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இம்மாணவருக்கு முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இயக்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்து மாணவரையும், பள்ளி மொத்த தேர்ச்சி விகிதத்தையும் பாராட்டி பேசினார். பள்ளி அதிபர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
