/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பாரைப்பட்டியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
/
என்.பாரைப்பட்டியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
என்.பாரைப்பட்டியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
என்.பாரைப்பட்டியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
ADDED : பிப் 22, 2025 05:59 AM

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக பாடியூர் என்.பாரைப்பட்டியில் ஒவ்வொரு வெள்ளத்திலும் ஆற்றுப்பாலம் அரிக்கப்பட்டு ரோடு வசதி துண்டிக்கப்படும் பகுதியை சட்டசபை மதிப்பீட்டுக்குழு ஆய்வு நடத்தியது.
வடமதுரை ஒன்றியம் பாடியூர் ஊராட்சியில் கடைசி கிராமமாக உள்ளது என்.பாரைப்பட்டி. இதையொட்டி சந்தனவர்த்தினி ஆறும், அதற்கடுத்தாக திண்டுக்கல் குஜிலியம்பாறை மெயின் ரோடும் உள்ளது. இங்குள்ள ஆற்றில் தரைமட்ட பாலம் ஒவ்வொரு கன மழை வெள்ளத்தில் சேதமடைகிறது. இங்குள்ள மக்களின் சிரமம், உயர் மட்ட பாலம் அமைய வேண்டியதன் அவசியம் குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக இதை வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும் சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவருமான காந்திராஜன் தலைமையில் அம்பேத்குமார், அருண்குமார், கருமாணிக்கம், காதர்பாட்சாமுத்துராமலிங்கம், சேவூர் ராமசந்திரன், ஓ.எஸ்.மணியன், வெங்கடேஷ்வரன், கலெக்டர் சரவணன், திட்ட இயக்குனர் திலகவதி ஆய்வு செய்தனர். மேலும் குளத்துாரில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை, பணி நடக்கும் சமுதாயக்கூடம், எரியோட்டில் பழுதடைந்து அகற்றப்பட்ட பயணியர் விடுதியிலும் ஆய்வு நடந்தது.

