ADDED : ஏப் 30, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
பழநி,மே 1-
பழநி அடிவாரம் பகுதியில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
பழநி அடிவாரம் குறவன் பாறையை சேர்ந்தவர் சந்திரசேகர் 32. இவர் அடிவாரம் பகுதியில் ஆட்டோ ஒட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு அய்யம்புள்ளி ரோட்டில் நடந்து வந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரை தாக்கினர். பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் இறந்தார். பழநி, அடிவாரம் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
