ADDED : ஜூலை 31, 2026 08:54 PM
தாண்டிக்குடி, ஆக.1-
தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அவகோடா தினத்தை முன்னிட்டு தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் உயர்நிலைக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கோயம்புத்துார் தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் அவகோடா சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, சாகுபடியில் உள்ள பிரச்னைகளும் தீர்வுகளும் குறித்து விளக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார், பூச்சிகள் துறை பேராசிரியர் ஜெயராஜ், நோயியல் துறை பேராசிரியர் கண்ணன், வேளாண் பல்கலை தொலைதூர கல்வித்துறை முன்னாள் இயக்குனர் ஆனந்தன், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் முத்துராமலிங்கம், கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திர கவிதா, புதுக்கோட்டை வேளாண் கல்லுாரி முன்னாள் முதல்வர் மகேந்திரன், டாடா ரேலீஸ் நிறுவன மேலாளர் டோனி மேக்சிமின், நவீன்குமார் பங்கேற்றனர்.
