ADDED : ஏப் 24, 2024 12:23 AM
அ நிறம் | அளவு
சித்தையன்கோட்டை : சித்தையன்கோட்டை 4வது பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக புத்தக தின பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனகவள்ளி, புரவலர் பவானி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பிரியதர்ஷினி 6ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஆங்கில அகராதி புத்தகங்களை வழங்கினார். கல்வியாண்டில் சிறப்பான செயல்பாடு, தேர்வு, விளையாட்டு, தனித்திறன் போன்றவற்றில் வென்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.
விடுமுறை நாளில் படிக்க ஏதுவான புத்தகங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக மரக்கன்று, மஞ்சப்பை வழங்கப்பட்டது. ஆசிரியர் ராமு இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
