ADDED : செப் 13, 2024 05:46 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் வேளாண்மை அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சரவணமுத்து தலைமை வகித்தார்.
உதவி இயக்குநர் நாகேந்திரன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரத்தினக் குமார், நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாங்கம், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
