ADDED : ஜூன் 28, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் அம்பிகா காட்டன் மில்லில் பணிபுரியும் பணியாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தலில் நடந்த இம்முகாமிற்கு கோபால்பட்டி மருத்துவ அலுவலர் வினிதா தலைமை வகித்தார். இதில் அம்பிகா காட்டன்மில்ஸ் பொது மேலாளர்கள் வீரக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கசாமி, திருப்பதி, நவநீதகிருஷ்ணன், ரியாஸ்கான், பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முனியப்பன், மனிதவளத்துறை ஆனந்தஜோதி செய்திருந்தனர்.
