ADDED : ஜூலை 24, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி, ஜூலை 25-
கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சக்கிலியன்கொடையில் பிறப்பு குறைத்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் வனிதா முன்னிலை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்து இளம்வயது திருமணம், அதிக குழந்தை பேறால் பெண்களுக்கு ஏற்படும் பின் விளைவுகள், குடும்பநல அறுவை சிகிச்சை உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிவேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம சுகாதார செவிலியர் கீர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், சௌந்தரம், சிவசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
