ADDED : ஜூலை 26, 2026 07:23 PM
கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு மண்டபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில், பால்வினை நோய் மற்றும் ஹெச்.ஐ.வி., விழிப்புணர்வு முகாம், கலை நிகழ்ச்சி நடந்தது.
கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கோபால்பட்டி மருத்துவ அலுவலர் வினிதா, மேற்பார்வையாளர் ஜெசிந்தா, ஐ.சி.டி.சி., கவுன்சிலர்கள், லேப் டெக்னீசியன்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பெண்கள் நல தன்னார்வலர்கள், காசநோய் தடுப்புத் திட்டப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவக்குழு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பால்வினை நோய்கள், எச்.ஐ.வி.,சிப்லிஸிஸ், காசநோய் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மக்களைத்தேடி மருத்துவ பணியாளர்கள், வேம்பார்பட்டி ஊராட்சிச் செயலர் கென்னடி ஆகியோர் செய்திருந்தனர். பால்வினை நோய், எச்.ஐ.வி., பற்றி கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
