ADDED : ஜூன் 28, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: விருதலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் என்.சி.சி., சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போதைப் பொருட்களின் பயன்பாட்டால் இளைஞர்களின் வாழ்வு வீணாகிவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். என்.சி.சி.,இயக்கப் பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை தலைமை வகித்தார். ஆசிரியைகள் ரோஜா, வித்யாலட்சுமி, நிர்மலாதேவி, அபிநயா பங்கேற்றனர்.
