ADDED : ஜூன் 16, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஜூன் 17-
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் ரத்த தானம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், வினாடி வினா போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமொழி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் காளிமுத்து, பள்ளி என்.சி.சி., சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை டாக்டர் ஆசைத்தம்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி போட்டியை நடத்தினார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் ராஜூ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் சரவணவேல், என்.சி.சி., அலுவலர் பால்பாண்டி செய்தனர்.
