/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்கள்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்கள்
ADDED : ஆக 18, 2024 07:19 AM

வத்தலக்குண்டு : சந்தைக்கு வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந்தன.
வத்தலகுண்டு சந்தைக்கு திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆடி மாதம் முதல் வாழைத்தார்களின் வரத்து சரிய தொடங்கியது. பத்தாயிரம் தார்கள் வந்த சந்தையில் 3000 மட்டுமே விற்பனைக்கு வந்ததால் தார்களுக்கு நல்ல விலை கிடைத்தது.
ஆவணி சுப முகூர்த்த தினங்கள் வருவதை யொட்டி வாழைத்தார்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
செவ்வாழை தார் ரூ. 2000 க்கு ஏலம் போனது. ரஸ்தாலி ரூ. 300 முதல் 700 , கற்பூரவள்ளி ரூ. 250 முதல் 700 வரை விற்றது.
முப்பட்டை தார் மிக குறைந்த அளவிலே கொண்டுவரப்பட்டதால் ரூ. 700க்கு விற்பனையானது.இதேபோல் நாழிப்பூவன், பூவன்வாழை, பச்சை வாழை உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்களுக்கும் நல்ல விலை கிடைத்தது.

