ADDED : மார் 23, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கிரி வீதியில் பக்தர்களின் வசதிக்கென புதிய பேட்டரி கார்களை கோயில் நிர்வாகம் வாங்கி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் , வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவீதி வழியாக ரோப் கார், வின்ச், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் மினி பஸ் சேவையை துவங்கியது. இதை தொடர்ந்து தற்போது கோயில் நிர்வாகம் ரூ. 15 லட்சத்திற்கு 3 பேட்டரி கார்களை வாங்கி உள்ளது.

