ADDED : ஜூலை 30, 2024 05:54 AM

திண்டுக்கல் : புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் தங்கள் சேமிப்பில் புத்தம் வாங்கிக் கொள்ள ஏதுவாக செயல்படுத்தப்படும் இலவச உண்டியல் சேமிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா அக்டோபர் 10 முதல் 20 வரை திண்டுக்கல்லில் நடக்கிறது.
பள்ளி மாணவர்கள் தாங்களே சேமித்து புத்தகங்களை வாங்கிப் பயன்பெற ஏதுவாக இலவச சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. இதை திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல் தொடங்கி வைத்தார்.
இலக்கியக்கள செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். தலைவர் மனோகரன் புத்தக வாசிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
புனித மரியன்னை, புனித வளனார், எம்.எஸ்.பி., சோலை நாடார் உள்ளிட்ட பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் உண்டியல்களை பெற்றுக் கொண்டனர்.
ஆசிரியர்கள் சாமி, பாலசந்திரன் கலந்து கொண்டனர். இலக்கியக்கள துணைத்தலைவர் சரவணன் நன்றி கூறினார்.