தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ.,டூவீலர் ஊர்வலம்

பா.ஜ.,டூவீலர் ஊர்வலம்

பா.ஜ.,டூவீலர் ஊர்வலம்


ADDED : ஆக 16, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சுதந்திரதினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் டூவீலர் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் மெங்கிஸ் ரோடு, நாகல் நகர் ,கணேஷ் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு பகுதியில் முடிந்தது. மாநகராட்சி காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் நாட்ராயன், சூரியகுமார், துணைத் தலைவர்கள் தான்ராஜ், அருண்குமார், பிரேம், செயலாளர்கள் பாலாஜி, சிவக்குமார், கண்ணன், பொருளாளர் செல்வகுமார்,மாவட்ட துணைத் தலைவர்கள் மல்லிகா, செந்தாமரை, மாவட்டச் செயலாளர்கள் முத்துக்குமார், சபாபதி, ஆனந்தி பங்கேற்றனர்.

*வடமதுரை:வேடசந்துார் சட்டசபை தொகுதிக்கான பா.ஜ.,வினரின் டூவீலர் ஊர்வலம் வடமதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மண்டல தலைவர்கள் வீரப்பன், நாகராஜன், செந்தில்குமார், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் டூவீலர்களில் அமர்ந்தபடி தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக நகரை வலம் வந்தனர்.

*பழநி பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தங்கராஜ் கொடியேற்றினார். அதன் பின் திண்டுக்கல் ரோடு வழியாக டூவீலரில் ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி, காந்தி மார்க்கெட் ரோடு சென்று நேதாஜி சிலை அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us