ADDED : மே 06, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 7-
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றத்தில் மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி தேர்தலில் பா.ஜ., வெற்றிக் கொண்டாட்டம், தமிழகம், கேரளம் மாநிலங்களில் பா.ஜ.,வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், ஆப்ரேஷன் சிந்துார் முதலாம் ஆண்டு வெற்றி தினம், ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது.மன்றப் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஸ்பாண்டி, அருணகிரி, ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினர். நிர்வாகிகள் நாகரத்தினம், வைரவேல் பங்கேற்றனர்.
