ADDED : ஆக 29, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் வேடசந்துாரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் --2024 நடைபெற உள்ளதால், அதற்கான செயல்பாடுகள் குறித்த மண்டல பயிலரங்கம் நடந்தது. ஒன்றிய தலைவர் கோபால் தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நடராஜன், லோகநாதன், செல்வம் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் மகேந்திரன் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் பேசினார்.
செப்.1- முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.