/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூத்துக் குலுங்கும் வெங்காய பூக்கள்
/
பூத்துக் குலுங்கும் வெங்காய பூக்கள்
ADDED : மார் 22, 2024 05:12 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விதைகள் எடுப்பதற்காக பயிரிடப்பட்ட வெங்காயத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பழைய வெங்காயத்தை வாங்கி நடவு செய்வது ஒரு வகை.
வெங்காய விதைகளை நட்டு நாற்றுகளை எடுத்து நட்டு பயிர் செய்வது இரண்டாவது வகை. இரண்டாவது முறையில் வெங்காயம் பயிர் செய்தால் மகசூல் அதிகம் கிடைக்கும். தரமான வெங்காயமும் கிடைக்கும்.
இதன்படி ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சில விவசாயிகள் இதை பெருமளவு பயிரிட்டுள்ளனர். தற்போது வெங்காய பூக்களில் இருந்து விதைகளை எடுத்து விற்பனை செய்தும் வருகின்றனர். தற்போது இதில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

