/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணினி ஆப்பரேட்டரிடம் லஞ்சம்; புகார்
/
கணினி ஆப்பரேட்டரிடம் லஞ்சம்; புகார்
ADDED : ஜூலை 16, 2024 05:52 AM
செம்பட்டி, : ஊராட்சி கணினி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்க தலைவர் லஞ்சம் கேட்டதாக ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.
ஆத்துார் அய்யங்கோட்டை ஊராட்சியில் அ.புதுாரை சேர்ந்த மருதவள்ளி கணினி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 7 மாதமாக சம்பளம் வழங்காத நிலையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் சம்பளத்திற்கான ஓ.டி.பி., எண்ணிற்கு கையெழுத்து இடுவேன் என ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் கூறி உள்ளார்.
இது தொடர்பாக மருதவள்ளி சட்டக் கல்லுாரி மாணவர்கள் சிலருடன் சென்று ஆத்துார் பி.டி.ஓ., அருள்கலாவதியிடம் புகார் மனு அளித்தார்.
இதற்கான ஆடியோவுடன் கூடிய வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பி.டி.ஓ., தெரிவித்தார்.
ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் கூறுகையில், ''யாரிடமும் பணம் கேட்கவில்லை. தவறான குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்'' என்றார்.