ADDED : செப் 27, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் புகையிலைப் பட்டியில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நடந்தது.
பள்ளியின் தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் முகாமை துவக்கி வைத்து பேசினார். புகையிலைப்பட்டி பங்குத் தந்தை நெல்சன் அமல்ராஜ், சாணார்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) அண்ணாதுரை, கொசவபட்டி பி.எம்.ஓ., முத்துக்குமார் ஆகியோர் முகாமின் சிறப்பு, ஆரோக்கியம், தனிமனித ஒழுக்கம், போதைப் பொருட்கள் பயன்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திட்ட அலுவலர் ஹெலன், பள்ளி முதல்வர் ஞானசீலா பங்கேற்றனர்.
