நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாரதியார் தினம் , குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஈ குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் , தடகள போட்டிகள் நடந்து வருகிறது. பழநி கல்வி மாவட்டம் சார்பில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடந்த போட்டிகளை வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தியது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இம்மாத இறுதி வரை இப்போட்டிகள் நடக்கிறது.

