ADDED : ஜூன் 18, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி, ஜூன் 19-
சதுர்த்தியை முன்னிட்டு தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதுபோல் கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
