ADDED : ஆக 02, 2026 06:52 PM
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை கிலோ ரூ.8ல் இருந்து குறைந்து ரூ.5 க்கு விற்பனை ஆனதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.ர
ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை சுற்றியுள்ள பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களாக அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது. இதன் காரணமாக பல நாட்களாக சுரைக்காய் கிலோ ரூ.8 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடந்து வருவதால் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் விலை குறைந்து கிலோ ரூ.4 க்கு விற்பனையானதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சில்லறை விற்பனை காய்கறி கடைகளில் கிலோ ரூ.30 வரை விற்கப்படுகிறது.
வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விலை இன்னும் குறையும்.’, என்றார்.
