ADDED : ஆக 28, 2024 05:56 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை பாதியாக குறைந்து கிலோ ரூ.12க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, பெரியகோட்டை. வடகாடு, கண்ணனுார், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றிய கிராம பகுதிகளில் டிஸ்கோ கத்தரி அதிகமாக பயிரிடப்படுகிறது.
தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடப்பதால் மார்க்கெட்டிற்கு டிஸ்கோ கத்தரி வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் கிலோ ரூ.24 க்கு விற்ற டிஸ்கோ கத்தரி தற்போதுரூ.12 க்கு விற்பனையாகிறது.
இந்த விலையானது கட்டுபடி ஆகாது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
