ADDED : ஜூலை 18, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார்.
நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஊரக வளர்ச்சி மண்டல அலுவலர் வீரராகவன், தாசில்தார் சுகந்தி, ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். பி.டி.ஒ., கற்பகம் வரவேற்றார்.
564 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பி.டி.ஒ., வடிவேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் சவரிமுத்து, தேன்மொழி முருகன், ராஜேஸ்வரி அழகர்சாமி, செல்விவீரன் கலந்து கொண்டனர்.

