ADDED : பிப் 23, 2025 06:20 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார் : புளியமரத்துக்கோட்டை யில் அமைதி அறக்கட்டளை, மாவட்ட காவல்துறை, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் உரிமைக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகம் நடந்தது. அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார்.மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா முன்னிலை வகித்தார்.
அமைதி அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினர். தலைமை ஆசிரியைகள் செல்வராணி, சாந்தி பங்கேற்றனர்.
