தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இரு தரப்பினர் மோதல்:நால்வர் கைது

இரு தரப்பினர் மோதல்:நால்வர் கைது

இரு தரப்பினர் மோதல்:நால்வர் கைது


ADDED : ஜூன் 21, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செந்துறை: நத்தம் செந்துறை பழநிபட்டியை சேர்ந்தவர் குமரவேல் 28.

இவர் பழநிபட்டியில் கோழிப்பண்ணை நடத்துகிறார். அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டியன் 30,என்பவர் ஊருக்குள் இருக்கும் கோழிப்பண்ணையால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வருவதாக கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு இருந்தது. மருதுபாண்டியன் தனது மாமா பாண்டிதுரையுடன் இருந்தபோது குமரவேல்,அவரது உறவினர்களுடன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கினர். இரு தரப்பினரும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இரு தரப்பும் நத்தம் போலீசில் புகாரளித்தனர். எஸ்.ஐ., விஜயபாண்டியன் பிரேம்குமார் 28, தனுஷ்பாபு 26, அருள்பாண்டி 28, பார்த்தசாரதி 27 ஆகியோரை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us