/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் டெவலப்மென்டுக்கு கலெக்டர் உத்தரவு
/
திண்டுக்கல் டெவலப்மென்டுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 08, 2025 06:18 AM
திண்டுக்கல் : செயல்படாத சிக்னல்கள், சேதமான பூங்காக்கள், பழுதான தெரு விளக்குகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனே செய்து முடிக்க கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் ரோடு, ஆர்.எம். காலனி, நேருஜி நகர் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.
பொழுது போக்கிற்கான பூங்காக்களும் முடங்கி உள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாமல் பழுதாகி இருப்பதால் குற்ற செயல்கள் நடக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொது மக்கள் தரப்பில் கலெக்டர் சரவணனுக்கு வந்தது.
இதையடுத்து திண்டுக்கல் நகரை டெவலப்மென்ட் செய்யும் வகையில் சில தினங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் ரோடு, ஆர்.எம். காலனி உள்ளிட்ட 12 இடங்களில் ஆய்வு செய்து தெரு விளக்குகள், கேமராக்கள், ரோட்டோர சென்டர் மீடியன்கள், சிக்னல்களை சரி செய்ய உத்தரவிட்டார். இதற்கான பணிகள் நடக்கும் நிலையில் நேற்று காலை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பஸ் ஸ்டாண்ட், நேருஜி நகர் ரவுண்டானா, திருவள்ளுவர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் திடீரென ஆய்வில் ஈடுபட்டார்.
புதிய மரங்கள் நடவு செய்யப்படும்
கலெக்டர் சரவணன் கூறியதாவது: திண்டுக்கல் நகரில் சில பகுதிகளில் சிக்னல்கள், போக்குவரத்து நெரிசல், பூங்காக்கள் செயல்படாமல் இருப்பதாக தகவல் வந்தது.
அதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளேன். 2 மாதங்களில் அதற்கான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நகருக்குள் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.