நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர காங்., சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து மாநகராட்சி அருகே உள்ள மணிக்கூண்டு வரை அமைதி ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மாவட்ட பொது செயலாளர்கள் அபுதாகிர், வேங்கை ராஜா, மாவட்ட துணைத்தலை வர் ஜோதிராமலிங்கம், பகுதி செயலாளர்கள் உதயகுமார், அப்பாஸ் மந்திரி, நாகலட்சுமி, மதுரை வீரன் பங்கேற்றனர்.

