நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் சோலைக்கால் பகுதியை சேர்ந்தவர் துாய்மை பணியாளர் கணபதி60. குளத்துார் பகுதியில் வீட்டில் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது இறந்தார். காங்.,எஸ்.சி.எஸ்.டி.,பிரிவு நிர்வாகிகள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கணபதிக்கு பணி வழங்கிய சம்பந்தபட்ட வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்தனர்.