ADDED : ஏப் 09, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடந்த மாநில ஸ்கேட்டிங் போட்டியில் பண்ணை மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்தனர்.
மாணவர்கள் அக்னப் ரிங் 1ல் முதல் இடம், ரிங் 2ல் 2ம் இடம், தீக்சன் ரிங் 1ல் முதலிடம், கதிர் ரிங் 1ல் 2ம் இடம், ரிங் -2ல் 3ம் இடம், மிதுன் ரிங் 1ல் 2ம் இடம், மாதேஷ் கண்ணன் ரிங் 1, 2ல் முதலிடம், மாணவிகள் ரிதன்யாஸ்ரீ ரிங் 1ல் முதலிடம், ரிங்-2ல் 3ம் இடம், மாணவி அம்ரா ரிங் 1ல் 2ம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.
பள்ளி தலைவர் ஸ்ரீதர், துணைத்தலைவர் சந்தோஷ், தாளாளர் செல்வி, ஸ்ரீலீனாஸ்ரீ, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் செல்வலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் சூசை ப்ரெடரிக், சத்யா ஆகியோர் சாதனை மாணவர்களை வாழ்த்தினர்.

