/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 04, 2025 05:24 AM
திண்டுக்கல்: நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை திரும்பபெற வேண்டும். மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டு வரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களையும் புறக்கணித்து பல்வேறு துறைகளின் இயங்கும் 36 நலவாரியங்களையும் காத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்மாநில கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பொன்னாண்டவர் தலைமை வகித்தார். பொருளாளர் மயில்சாமி முன்னிலை வகித்தார். டில்லி பஞ்சாயத்து சங்க மாவட்ட செயலர் கென்னடி வரவேற்றார்.
கட்டுமான சங்க அமைப்புகளை சேர்ந்த பாலு, பாலன், மணிவேல், வில்லியம், ஜனனி பங்கேற்றனர்.